சிவகங்கை கப்பல் சேவை தொடர்பான அறிவிப்பு....

tubetamil
0

 தமிழ்நாட்டின் நாகப்பட்டிணத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறைக்கு நடத்தப்படும் பயணிகள் கப்பல் சேவை மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் 16ஆம் திகதி ஆரம்பித்த, இந்த சிவகங்கை கப்பல் சேவை நாளாந்தம் நடைபெற்று வந்தது.

எனினும் குறைந்த பயணிகளின் வருகை காரணமாக செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்டு, கிரமமாக சேவை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சனிக்கிழமைகளிலும் கப்பலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடம் இருந்து விடுக்கப்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

பயணிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்று செப்டெம்பர் 21 முதல் சனிக்கிழமைகளிலும் சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் இயக்கப்படும். பயணிகள் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தநிலையில், கப்பல் நாகப்பட்டிணத்தில் இருந்து காலை 8 மணிக்கும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கும் புறப்படும் என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top