தடுமாறிய நியூசிலாந்து அணி.!

tubetamil
0

 இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சானது நியூசிலாந்து வீரர்களை குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க செய்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியின் சூழல் பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரிய இந்த போட்டியில் 6விக்கட்டுக்களை வீழ்த்தி இலங்கை அணிக்கு வலு சேர்த்துள்ளார்.டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் இதுவரை பிரபாத் ஜெயசூரிய 9 முறை 5விக்கட்டுக்களை கைப்பற்றிய நிலையில் இந்த போட்டியோடு 10 முறை 5விக்கட்டுக்களை கைப்பற்றிய இலங்கை வீரராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இந்த போட்டியில் தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.


மேலும் இந்த போட்டியில் இலங்கை அணி 514 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை அணி நேற்று தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 602 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்னிங்ஸ் இடைநிறுத்தப்பட்டது.கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top