உலகின் முதல் அணுக்கரு கடிகாரம்...

tubetamil
0

உலகின் முதல் அணுக்கரு கடிகாரத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்த கடிகாரத்தால் நேரத்தை மிக துல்லியமாக கண்டறிய முடியும். கொலராடோ போல்டர் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய தரநிலை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கிய இந்த கடிகாரம் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அணுவின் உட்கருவில் இருந்து வரும் சமிக்ஞைகள் மூலம் இந்த கடிகாரம் இயங்குகிறது.

இந்த அணுக்கரு கடிகாரம் சர்வதேச நேரத்தை அதிகாரப்பூர்வமாக சொல்லும் தற்போதைய அணு கடிகாரங்களை விட அதிக துல்லியத்துடன் நேரத்தை சொல்கிறது.



எதிர்காலத்தில் அணு கடிகாரங்களுக்கு மாற்றாக அணுக்கரு கடிகாரங்கள் வரக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

GPS அமைப்புகள் அதிக துல்லியத்துடன் செயல்படுவதற்கும், இணைய வேகத்தை அதிகரிப்பதற்கும், டிஜிட்டல் தகவல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கும் இந்த கடிகாரம் முக்கியமானதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top