ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு..!!

tubetamil
0

 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டுத் தலையீடு, குறிப்பாக அதன் தூதுவர் ஜூலி சங் ஊடாக அமெரிக்காவின் தலையீடு இருப்பதாக, தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறிய காணொளி சில மணி நேரங்களிலேயே, அனைத்து இணைய தளங்களில் இருந்தும் மர்மமான முறையில் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கையில்  ரணில் விக்ரமசிங்கவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதே அமெரிக்கா மற்றும் சங்கின் இலக்கு என வீரவன்ச அந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

ரணில் தோல்வியுற்றால், அடுத்த ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா உத்தேசித்துள்ளதாக வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும். இந்த நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னர் அந்த காணொளி அகற்றப்பட்டுள்ளது.        ஜூலி சங் தேசிய மக்கள் சக்தி அலுவலகத்திற்கு பலமுறை சென்றுள்ளார்.

யுஎஸ்எய்ட் நிர்வாகியான சமந்தா பவர் கூட, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியவை தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது சந்தித்துள்ளதாக விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் இலங்கை வந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திப்பதில் ஆர்வமாக இருந்தார்.


அத்துடன் இந்தியா சென்ற அநுரகுமார திஸாநாயக்க அங்கு அதிகாரிகளையும் சந்தித்தார்.இந்தநிலையில் அமெரிக்காவின் முதல் தெரிவு ரணில், அதனைத் தொடர்ந்து அநுரகுமார என்று விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை குறித்த அரசியல் நிகழ்ச்சி காணொளி, பல்வேறு தரப்பினரின் அழுத்தம் காரணமாக நீக்கப்பட்டதாக விமல் வீரவன்ச தமது பேஸ்புக் பக்கத்தில் குற்றம் சுமத்தியுள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top