தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, சர்வதேச நீர் சங்கத்தால் சாதனையாளர் பிரிவில் ‘சிறந்த காலநிலை ஸ்மார்ட் பயன்பாடு’ என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதனை நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச நீர் சங்கத்தின் இந்த அங்கீகாரம், காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னுதாரணமாக இருப்பதற்கான சபையின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நீர் சம்மேளனத்தின் அங்கீகாரம், நீர் வழங்கல் சபையின் சாதனையாகும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.