அநுராதபுரம் - விஜயபுரத்திற்கு தனது சித்தியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஹங்கம பிரதேசத்திலிருந்து வந்த இளைஞர் இறுதிக் கிரியைகளை முடித்துவிட்டு நீராடச்சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அஹங்கம வீதி, இமதுவ வீதியைச் சேர்ந்த அருமப் பெரும ஆராச்சிலகே சதிச மகேஷன் என்ற 24 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறுதிக் கிரியைகள் நிறைவடைந்த பின்னர் மீண்டும் அஹங்கமவுக்குச் சென்ற இளைஞர் மேலும் நான்கு பேருடன் அனுராதபுரத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் நீராடச்சென்ற போதே அனர்த்தத்தில் சிக்கியுள்ளார்.இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.