டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றை படைத்த இந்திய வீரர்....

tubetamil
0

 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் விளையாடிய முதல் 10 இன்னிங்ஸ்களில், அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற புதிய வரலாற்றை, இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்

இதன் மூலமாக 147 ஆண்டு கால கிரிக்கெட் சாதனையை முறியடித்து ஜெய்ஸ்வால் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.


பங்களாதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், இன்றைய முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ஓட்டங்களை பெற்றது.

இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய அஸ்வின் 102 ஓட்டங்களையும் , ஜடேஜா 86 ஓட்டங்களையும் சேர்த்து களத்தில், ஆட்டமிழக்காது உள்ளனர்.

முன்னதாக, முன்னிலை வீரர்கள் சிறப்பாக செயற்படாத நிலையில், ஜெய்ஸ்வால் 118 பந்துகளில் 9 நான்கு ஓட்டங்கள் உட்பட 56 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் அரைசதம்  பெற்றதன் மூலமாக 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை, ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், சொந்த மண்ணில் விளையாடிய முதல் 10 இன்னிங்ஸ்களில் எந்த வீரரும் 750 ஓட்டங்களை எடுத்ததில்லை.

அந்த எண்ணிக்கையை ஜெய்ஸ்வால் இன்று அடைந்துள்ளார்.

இதற்கு முன்பாக 1935ஆம் ஆண்டு மேற்கிந்திய வீரர் ஜோர்ஜ் ஹெட்டிங்லே, சொந்த மண்ணில், முதல் 10 இன்னிங்ஸ்களில் 747 ஓட்டங்களை சேர்த்ததே சாதனையாக இருந்து வந்தது.

இந்த பட்டியலில் 2ஆவது இடத்தில் 743 ஓட்டங்களுடன் பாகிஸ்தானின் ஜாவித் மியான்டாட் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top