புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் வடக்கு ஆளுநர் பெருமிதம்...

tubetamil
0

 ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநராக இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களை கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்வதற்குரிய ஒருவர் என்பதை தெரிவிப்பதோடு இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த இடத்தில் வேறு எந்த ஜனாதிபதி வந்திருந்தாலும் இந்த பதவி எனக்கு கிடைத்திருக்கவும் மாட்டாது வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் இதனை ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன் என்றும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் எளிமையான முறையில் இன்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர்கள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top