பெண் அதிகாரி மரணம்!!

tubetamil
0

குருநாகல் பிரதேசத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தரின் மரணம் தொடர்பில் உடற்பகுதிகளை பகுப்பாய்வு செய்யுமாறு சட்ட வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.


குருநாகல் பகுதியை சேர்ந்த தனுஜா தில்ருக்ஷி விக்ரமநாயக்க என்ற 30 வயதுடைய திருமணமான பெண்ணே உயிரிழந்துள்ளார். கொழும்பு மேல் வர்த்தக நீதிமன்றத்தில் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய போதே அவர் உயிரிழந்துள்ளார். 

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திருமணமாகி கொட்டகசந்திய பிரதேசத்தில் உள்ள கணவரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் நிமோனியாவாக மாறியதால் கடந்த 31ஆம் திகதி குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவரது நிலை கவலைக்கிடமாகி மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய போதிலும், அங்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் அன்று இரவே தெல்தெனிய ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் இருந்து தெல்தெனிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் அன்றிரவு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையை மேற்கொண்ட கண்டி பொது வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி சந்திரதாச, பெண்ணின் மரணம் தொடர்பில் வெளிப்படையான தீர்ப்பை வழங்கியதுடன், மேலதிக பரிசோதனைக்காக உடல் உறுப்புகளை அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். 



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top