வாகன இறக்குமதிக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு....!

tubetamil
0

 படிப்படியான சலுகைகளை வழங்கி வாழ்க்கை சுமையை குறைக்கவுள்ளோம். இன்று நாட்டிற்கு மீண்டும் வாகன இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியிருக்கிறோம். 

வரி செலுத்தும் வரம்பை 5 இலட்சத்திலிருந்து 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருக்கிறோம். அதனால் வரிச்சுமை ஓரளவு குறையும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

புத்தளத்தில் நேற்றுநடைபெற்ற 'ரணிலால் இயலும்' பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி  இதனைக் குறிப்பிட்டார்.  

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ரூபாவை பலப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையினையே ஐஎம்எப் முதலில் விதித்தது. அதன்படி செயற்பட்டதாலேயே இன்று ரூபாயின் பெறுமதி அதிகரித்திருக்கிறது. அதனால் எரிவாயு, எண்ணெய், உணவு போன்றவற்றின் விலைகள் குறைந்துள்ளன. சமுர்த்தி போன்று மூன்று மடங்கு நிவாரணம் வழங்க முடிகிறது.  

நாம் படிப்படியான சலுகைகளை வழங்கி வாழ்க்கை சுமையை குறைப்போம். இன்று நாட்டிற்கு மீண்டும் வாகன இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியிருக்கிறோம்.

வரி செலுத்தும் வரம்பை 5 இலட்சத்திலிருந்து 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருக்கிறோம். அதனால் வரிச்சுமை ஓரளவு குறையும்.

எனவே திசைக்காட்டியிடம் எதிர்காலத்தை ஒப்படைக்க மக்கள் தயாாரக இருக்கிறாார்களா என்பதே எனது கேள்வி. திசைக்காட்டியிடம் எனது கேள்விக்கு பதில் இல்லை.


என்னோடு விவாதம் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதற்கு நான் தயார். அவர்களின் பொருளாதார முறைமை எதுவென சரியாக விளக்கம் சொன்ன பின்பே விவாதம் செய்ய முடியும்.

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தவும். வருமானத்தை அதிகரித்து தொழில் வாய்ப்புக்களை உருவாக்கவும் எம்மால் முடியும்.

விவசாயம், சுற்றுலாத்துறைகளை பலப்படுத்துவோம். கிராமங்களில் வறுமையை போக்குவோம். மீன்பிடித்துறையையும் பலப்படுத்துவோம். அதனையும் ஏற்றுமதி துறையாக மாற்றுவோம்.

புதிய நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் எம்மிடம் உள்ளது. அதற்காக பயணத்தை ஆரம்பித்துள்ள வேளையிலேயே மாற்றியமைக்க வேண்டுமா என்பதை மனதில் கொண்டு சிலிண்டருக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால். சிலிண்டரும் இருக்காது ரூபாவின் பெறுமதியும் பாதுகாக்கப்படாது என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top