உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த கோவிட், ஆய்வகம் ஒன்றிலிருந்து லீக்கானதாகவும், வேண்டுமென்றே பரப்பட்டிருக்கலாம் என்றும் வெளியான தகவல்கள் ஏற்படுத்திய பரபரப்பு இன்றும் அடங்கியதுபோல் தெரியவில்லை.
இந்நிலையில், மிகப்பெரிய ஆய்வு ஒன்றிற்குப் பின் அறிவியலாளர்கள் சில வெளியிட்டுள்ள ஆய்வக முடிவுகள் முக்கிய திருப்பம் ஒன்றை உருவாக்கியுள்ளன.
லட்சக்கணக்கான மக்களை பலிவாங்கிய கோவிட் கிருமிகள், சீனாவிலுள்ள ஆய்வகம் ஒன்றிலிருந்து லீக் ஆனதாக கூறப்பட்ட விடயம், உலகம் முழுவதையும் கொந்தளிக்கச் செய்ததை யாராலும் மறக்கமுடியாது.
இந்நிலையில், உலகின் மூத்த அறிவியலாளர்கள் சிலர், கோவிட் பரவல் விடயத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
ஆம், சீனாவின் வுஹான் என்னுமிடத்திலுள்ள கடல் உயிரினச் சந்தையிலிருந்துதான் கோவிட் தொற்று துவங்கியது என அவர்களுடைய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளார்கள்.
Scripps Research என்னும் அமெரிக்க ஆய்வமைப்பின் ஆய்வாளர்களில் ஒருவரான Kristian Andersen என்பவர், கோவிட் எங்கிருந்து பரவத்துவங்கியது என்பது தொடர்பான ஆய்வில், அனைத்து விடயங்களும் ஒரே விடயத்தைத்தான் கூறுகின்றன.
2019ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகள் வுஹான் சந்தைக்குக் கொண்டுவரப்பட, அங்கிருந்துதான் கோவிட் பரவத்துவங்கியுள்ளது என ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றன என்கிறார்.
நரி போன்று காணப்படும் raccoon dog என்னும் விலங்கு, palm civets, hoary bamboo rats, மற்றும் Malayan porcupines ஆகிய விலங்குகள், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கோவிட் பரவக் காரணமாக அமைந்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்