12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் இலவசமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு இவ்வாறு சிறுவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை வளாகத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணிவரை பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.