ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம்: ஏலத்தில்...!!!

tubetamil
0

 அணு ஆயுத காலத்தின் தொடக்கத்தில் அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஏலத்தில் $3.9 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

1939 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம், அண்மையில் நடந்த கிறிஸ்டியின்ஏலத்தில் அதிர்ச்சியூட்டும் விதமாக $3.9 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டுக்கு எழுதப்பட்ட இந்த கடிதத்தில், நாஜி ஜேர்மனி அணு ஆயுதங்களை உருவாக்கலாம் என்ற அச்சத்தில், அமெரிக்கா அணு ஆராய்ச்சியை முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.



கிறிஸ்டிஸ் நிபுணர் பீட்டர் கிளார்னெட், இந்த கடிதத்தை "வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க கடிதங்களில் ஒன்று" என்று விவரித்தார்.

முன்னதாக மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் வசம் இருந்த இந்த நகல், தனியார் கைகளில் இருந்த ஒரே நகலாகும்.

ஐன்ஸ்டீனின் வருத்தம்

அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அமெரிக்க அணு ஆயுத திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தாலும், பின்னர் இது குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்.


ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் குண்டுகள் வீசப்பட்டதைத் அடுத்து ஏற்பட்ட மனித அழிவை தொடர்ந்து, அணு ஆயுதங்களை உருவாக்குவதில் தனது பங்கை அவர் தனது "ஒரு பெரிய தவறு" என்று குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top