தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார வெற்றிபெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அலி சப்ரி தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தலைமை தாங்கும் முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்காக தீவிர பிரசாரங்களை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மக்கள் தங்களது தீர்மானத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்கவிற்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை மதிப்பதாக அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை வெற்றிகொள்வது மெய்யான சவால் கிடையாது என்பதனை வரலாற்று எமக்கு கற்றுக்கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றியீட்டியர்கள் அந்த உறுதிமொழிகளை வழங்கத் தவறியுள்ளதாக இந்த கடந்த கால தவறுகளிலிருந்து அநுரகுமார தரப்பினர் பாடம் கற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.