தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் 30 வருடமாக சினிமாவில் பணியாற்றி 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.
பல வெற்றி படங்களை கொடுத்த இவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் புகழ்பெற்ற தொகுப்பாளராக உள்ளார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இவருக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில் நாகார்ஜுனா நடித்து வருகிறார்.