ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் பிரதான வேட்பாளர்கள், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பின்னர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நீதியமைச்சர்,
“வேட்பாளர்கள் அரச ஊழியர்களின் சம்பள உயர்வை இலஞ்சமாக கருதி வாக்குறுதியளித்ததன் காரணமாகவே இந்த தகுதி நீக்கம் மேற்கொள்ளப்படும்.இந்த முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் அரிசி மூட்டைகள் மற்றும் பிரியாணி விநியோகம் மூலம் வாக்காளர்களை ஆதாயப்படுத்துவது ஜனாதிபதி பதவியை தகுதி நீக்கம் செய்ய போதுமான குற்றங்களாகும் .
அத்துடன் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வாக்குறுதி அளிப்பது இலஞ்சமாகும்.
எனவே, இந்த அடிப்படையில் எந்த பிரதான வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் செலவுகள் தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படுள்ளது.
இதேவேளை சில வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றிய அறிவிப்பு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தேவையான விசாரணைகளை ஆரம்பிக்கும். இறுதியில் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என விஜயதாச கூறியுள்ளார்.