சுவிட்சர்லாந்தில் சைவநெறி இளையோர் மன்ற பொதுக்கூட்டம்..!

tubetamil
0

சுவிட்சர்லாந்தின் சைவநெறிக்கூடத்தால் கடந்த மார்ச் 2024இல் அறிமுகப்படுத்தப்பட்ட இளையோர் மன்றத்தினது பொதுக்கூட்டம் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் 22.09.2024 நடைபெற்றது.

உறுப்பினர்கள் தொகையில் 100 தொட்டு நிற்கும் இளையோர்கள் மிகு ஆர்வத்துடன் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்துச் சிறப்பித்தனர்.


சுவிட்சர்லாந்தின் 4 மொழி பேசும் 26 மாநிலங்களில் வாழும் தமிழ் இளையவர்களையும் ஒருங்கிணைத்து இளையோர் மன்றம் செயற்படத் தொடங்கி உள்ளது. மதுசன் தர்மராஜா, நிதுலன் கீர்த்திசீலன், தீபிகா சண்முகராசா கிரிஸ்ணதாசன், சாயித்தியா திருநிறைச்செல்வன், அபர்னா இராசலிங்கம், அருளினி முருகவேள், பிரவீன் விக்னேஸ்வரன், சம்யுக்தா சசிக்குமார் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.

நேற்று காலை 10.00 மணிக்கு விருந்துடன் அறிமுகம் நடைபெற்றது. இளையோர் மன்றத்தின் வழிநெறி திரையில் அறிமுகம் செய்யப்பட்டது.

• ஆண்பெண் நிகர்மை (சமத்துவம்)

• விரிந்த உரையாடல்

• தெளிவான தகவல் பரிமாற்றம்

• தமிழ் வழிபாடு

• சாதிமறுப்பு ஆகியவை இளையோர் மன்றத்தின் பண்பாடும் தெளிவுடன் வருகையாளர்களுக்கு விளக்கப்பட்டு, சைவநெறிக்கூடம் இளையோர் மன்றத்தின் நோக்கம் செயற்பாடு வரையறுக்கப்பட்டது.


சைவநெறிக்கூடமாக தமிழினத்திற்கு தொண்டாற்ற அனைத்து இளையர்வளுக்கும் இத்தால் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்படி சமூகம், சமயக்கல்வி, சமத்துவம் எனக் கோடிட்டுக்காட்டப்பட்டது. சைவநெறிக்கூடம் தோற்றம், இந்துமதத்திற்கும் உள்ள வேற்றுமை - ஒற்றுமை, ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் தோற்றம், நோக்கம், குறிக்கோள் என்பது 1மணிநேரப் பயிலரங்கு வடிவில் சைவநெறிக்கூடத்தால் வழங்கப்பட்டது.

13.00 மணிக்கு நண்பகல் உணவைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. வருகையாளர்கள் தமது கேள்விகளை கேட்டு பதில் பெற்றுக்கொண்டனர்.


பயிலரங்கு தொடர்பில் தமது பின்னூட்டை வழங்கினர். மேற்காணும் ஆறு கட்டமைப்புக்களிலும் பணியாற்றும் ஆர்வம் விருப்பம் தொடர்பாக குழுக்களாக கலந்தாய்வு நடாத்தப்பட்டு கட்டமைப்புக்களில் இளையர்கள் இணைந்து கொண்டனர்.

1994ல் 14 முதல் 20 வயதிற்கு உட்பட்ட வயதினரால் தொடங்கப்பட்ட சைவநெறிக்கூடம் 2024ல் 16 முதல் 25 வயதிற்கு உட்பட்ட நூறிற்கும் மேற்பட்ட இளையவர்களை ஒருங்கிணைத்து இவ் இளையோர் மன்றத்தின் பொதுக்கூட்டத்தினை நடாத்தி உள்ளது.

பல் துறையிலும் கல்வி மற்றும் பட்டறிவு பெற்ற இத் தமிழ்ச் சமூகம் தொடர்ந்தும் சுவிசிலும், தமிழர் தாயகத்திற்கும் நற்பயன் விளைவிக்கும் பொதுப்பணிகளை நிறைவாக ஆற்றும் எனும் நம்பிக்கையினை சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தனது நன்றியுரையில் பகர்ந்து 16.00 மணிக்கு பொதுக்கூட்டம் நிறைவுற்றது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top