பதுளை - பசறை பிபிலை வீதியில் 15 ம் கட்டை பகுதியில் கொழும்பில் இருந்து லுணுகலை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று காலை இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த மூவரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில மேலதிக சிகிச்சைகளுக்காக இரண்டு பெண்களும் பதுளை பொது வைத்தியசாலைக்கும் ஒருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பசறை வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காயமடைந்த இருவர் லுணுகலை பகுதியை சேர்ந்தவர் எனவும் ஒருவர் கடவத்தை பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும் மேலதிக விசாரணைகளை பசறை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்