வீட்டு வேலைக்காக அழைத்துவரும் இளம்பெண்களை அடிமையாக்கி கூண்டுக்குள் அடைத்துவைத்த சுவிஸ் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில், வீட்டு வேலைக்காக இணையத்தில் இளம்பெண்களைத் தேடியுள்ளனர் ஒரு தம்பதியர்.
அப்போது, விசா காலாவதியான 22 வயது வெளிநாட்டு இளம்பெண் ஒருவரைக் கண்டுபிடித்த அந்த தம்பதியர், அந்தப் பெண்ணுக்கு மாதம் ஒன்றிற்கு 800 சுவிஸ் ஃப்ராங்குகள் ஊதியம் கொடுப்பதாகக் கூறியுள்ளார்கள்.
ஆனால், அந்த இளம்பெண் எப்போது கூப்பிட்டாலும் வேலைக்கு வரவேண்டும், அதாவது, 24 மணி நேரமும் வேலை செய்யத்தயாராக இருக்கவேண்டும்.
வேலையில்லாத நேரத்தில் அவரை ஒரு கூண்டுக்குள் அடைத்துவைத்துள்ளார்கள் அந்த தம்பதியர். அந்தக் கூண்டுக்குள்தான் அவர் உறங்கவேண்டுமாம்.
10 மாதங்கள் அடிமையாக நடத்தப்பட்ட அந்த இளம்பெண், ஒருநாள் அந்த வீட்டிலிருந்து தப்பிவிட்டார்.
அதிகாரிகளிடம் அவர் புகாரளிக்க, அந்த தம்பதியரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்கள் அவர்கள்.
அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிச்சியடையவைத்துள்ளது. ஆம், அந்தத் தம்பதியர் வேறொரு இளம்பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள்.
அந்த அதிகாரிகள் அங்கு செல்லும்போது, அந்த இளம்பெண் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்திருக்கிறார்!
அடுத்த மாதம் சூரிச்சில் இந்த வழக்கு விசாரணை துவங்க உள்ளது.