ஜனாதிபதி தேர்தலால் ஏற்பட்டுள்ள திருப்புமுனை..!!

tubetamil
0

 நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் திரும்புமுனைகள் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் பலர் நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச் செல்ல தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த அரசாங்கங்களின் போது பாரிய நிதி மோசடிகள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள், கொலைகள், ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.


இவர்கள் இன்னும் சில தினங்களில் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும், சில மாதங்களுக்கு முன்னரே நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான விசாக்களையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ள சில அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள், நாட்டில் உள்ள தமது சொத்துக்கள், தொழில்கள் மற்றும் சொத்துக்களை விற்று பணமாக மாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது.சட்டவிரோதமான உண்டியல் பணப் பரிவர்த்தனைகள் மூலம் தாங்கள் செல்லவிருக்கும் நாடுகளுக்கு ஏற்கனவே பணத்தை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top