மேள தாளத்துடன் தடபுடலாக நடந்து முடிந்த திருமணம்!

tubetamil
0

 நடிகை சாய்பல்லவி தங்கை- பூஜா திருமண காணொளி சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலாகி வருகின்றது.தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி.

இவர் பிரேமம் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.

இவருடைய படங்கள் தமிழக ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படுவதால் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சாய் பல்லவிக்கு பூஜா என்ற தங்கை உள்ளார். இவர் சமுத்திரக்கனியுடன் இணைந்து “சித்திரை செவ்வானம்” என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் சரியானதொரு இடத்தை பெற்றுக் கொடுக்காத காரணத்தினால் சினிமாவிலிருந்து விலகிய பூஜா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் பூஜா தன்னுடைய காதலருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து காதலிப்பதை உறுதி செய்திருந்தார்.இவர்களுக்கு நிச்சியதார்த்தம் முடிந்தது.

இதனையடுத்து தற்போது இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.

மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.   

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top