பிரித்தானியாவில் ஓல்ட்பரியில் உள்ள வீட்டில் 13 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததாக கடந்த வியாழக்கிழமை பொலிஸார் அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்களான 2 சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சட்டக் காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட சிறுவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.மேலும் குற்றவாளிகளுக்கு உதவியதற்காக 40 வயதுடைய நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தற்போது 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவர்கள் பர்மிங்காம் நீதிபதிகள் முன்பு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான சிசி ரீவி காட்சிகள் ஏதேனும் இருந்தால் தகவலுடன் முன்வருமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், கொலை சம்பவத்தின் விசாரணையில் வேறு எந்த சந்தேக நபரையும் தேடவில்லை என்றும் பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.