இந்திய கடற்றொழிலாளர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததற்கும், இரண்டு படகுகளை பறிமுதல் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக கடற்றொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக இலங்கையால் கைது செய்யப்பட்ட 17 இந்தியர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.