தேர்தல் பிரசாரங்கள் நள்ளிரவுடன் ஓய்வு..!

tubetamil
0

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள் நேற்று புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தன.

எனவே, மௌன காலத்தில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்துக்கு முரணாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ச, திலித் ஜயவீர, நுவன் போககே ஆகியோர் தலைநகர் கொழும்பில் நேற்று மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தினர். இதனால் கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.


சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் இறுதி பிரசாரக் கூட்டம் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாமர சந்தியில் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் இறுதி பிரசாரக் கூட்டம் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதி டவர் மண்டபத்துக்கு முன்பாக நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் இறுதி பிரசாரக் கூட்டம் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொட ஆனந்த சமரக்கோன் மைதானத்தில் இடம்பெற்றது.





Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top