யாழ்ப்பாணத்தில் தனது மகளை பலமுறை தவறான முறைக்கு உட்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை பலமுறை தவறான முறைக்கு உட்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த யுவதி கர்ப்பமடைந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் அவர் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இந்நிலையில், சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பொலிஸார் தந்தையை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவமானது இணுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்பதுடன், குறித்த யுவதி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.