எலோன் மஸ்கின் செயற்கைக்கோள் பிரிவான ஸ்டார்லிங்கின் செயல்பாடுகளை அமைப்பதற்கான இலங்கையின் திட்டம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சில அனுமதிகள் நிலுவையில் உள்ளதால், ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டார்லிங்கிற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் முன்னதாக அறிவித்தார்.இந்நிலையிவ், எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்கை நாட்டில் செயல்பட அனுமதிக்கும் வகையில், பல தசாப்தங்கள் பழமையான சட்டத்தில் திருத்தங்களை செவ்வாயன்று நாடாளுமன்றம் அங்கீகரித்தது.
28 ஆண்டுகளில் முதல் முறையாக தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட புதிய தொலைத்தொடர்பு மசோதாவை வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
திருத்தங்கள் மூன்று புதிய வகையான உரிமங்களை அறிமுகப்படுத்தியது்டன் ஸ்டார்லிங்க் இலங்கையின் தொலைத்தொடர்பு சந்தையில் உரிமம் பெற்ற சேவை வழங்குநராக நுழைய அனுமதிக்கிறது.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்த நடவடிக்கை சாத்தியமற்றது என்று அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும் ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆள்வதற்கான அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்க இலங்கையர்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு செல்லவுள்ளனர்.
எனினும் ஸ்டார்லிங்க் தொடங்கப்பட்டதும், எலோன் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.