ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அலுவலகம் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
மதவாச்சி தொகுதியின் கிரிகல்லேவ பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அலுவலகம் மீது நேற்று முன்தினம் இரவு சிலர் அசிட் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து கட்சி உறுப்பினர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார, இந்த நாசகார செயலை மக்கள் விடுதலை முன்னணியின் கும்பலால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் மீண்டும் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஜே.வி.பியின் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அப்பாவி மக்கள் தமது கொள்கைகளுக்கு அடிபணியவில்லை என்றால் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, மதவாச்சி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.