இலங்கையின் ஆயுதப்படையினரால் நடத்தப்படும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது தன்னிச்சையான கைதுகள், துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகள் குறித்து விசாரணை செய்யுமாறு சுவிட்சர்லாந்து கோரியுள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் பேசிய சுவிட்சர்லாந்து பிரதிநிதி, இதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான சுவிஸ் தூதர் ஜுர்க் லாபர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இணையப்பாதுகாப்பு சட்டம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நிர்வகிக்கும் சட்டங்கள் போன்ற அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பது குறித்தும் அவர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.