தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க, வவுனியாவில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் மைதானம் நிறைந்த மக்கள் கூட்டம் காணப்பட்டது.
குறித்த கூட்டம், வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் உபாலி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.