யாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியை விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சங்கானையில் வீதியில் சென்ற பெண்ணொருவரின் தங்க நகையை கொள்ளையிட்ட தம்பதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதி, சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்ற வேளை அந்தப் பகுதி மக்கள் மடக்கி பிடித்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் குறித்த தம்பதியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.