ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பிள்ளையான் போன்ற கொலையாளிகளை கைது செய்யப்படுவார்கள் இது எனது அரசாட்சியில் நிறைவேற்றப்படும் என சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த இரா சாணக்கியன். மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மயிலத்தமடுமாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கான தீர்வினையும் , அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான தீர்வினையும் , ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும் , அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டுவதோடு , பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்ய வேண்டும்