பிரித்தானியாவுக்கு பயணப்பட திட்டமிடும் அமெரிக்க மக்கள் இனி புதிய விசா கட்டணம் ஒன்றையும் செலுத்த வேண்டும்.
எதிர்வரும் 2025 ஜனவரி 8ம் திகதி முதல் மின்னணு பயண அங்கீகாரம் எனப்படும் இந்த புதிய விதி அமுலுக்கு வருகிறது. இதனால் அமெரிக்க பயணிகள் கூடுதலாக 10 பவுண்டுகள் அல்லது 13.05 டொலர் செலுத்த நேரிடும்.
எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி முதல் அமெரிக்க குடிமக்கள் ETA எனப்படும் மின்னணு பயண அங்கீகாரத்திற்காக விண்ணப்பிக்கலாம். குறைந்தது 3 வேலை நாட்களில் அதிகாரிகளால் பதிலளிக்கப்படும்.
ஒவ்வொரு பயணியும் தங்களுக்கு என ஒரு மின்னணு பயண அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இது அவர்களின் பிள்ளைகளுக்கும் பொருந்தும். பிரித்தானியாவுக்கு பயணப்பட்ட விரும்பும் அனைவரும் இனி உரிய அனுமதி பெற வேண்டும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
ஆனால் வெளிநாட்டில் தங்கியிருக்கும் பிரித்தானியர்களுக்கும் அயர்லாந்து நாட்டவர்களுக்கும் இது பொருந்தாது என்றே அமைச்சர் Seema Malhotra தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக அமெரிக்கா குடிமக்களுக்கும், தொடர்ந்து அனைத்து நாடுகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 7 வளைகுடா நாடுகளுக்கு ETA திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.