இங்கிலாந்தின் சுற்றுலா அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை நேற்று முடிவடைந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 152 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளதுடன் இரு வீரர்கள் தலா 20 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி தமது முதன் இன்னிங்ஸில் 366 ஓட்டங்களை எடுத்தது இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 291 ஓட்டங்களை பெற்றது.
அத்துடன் இரண்டாம் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 221 ஓட்டங்களை பெற்ற நிலையில், தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை ஓட்ட இலக்கை எட்ட முடியாமல், 152 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக்கொண்டது.
இந்த வெற்றி கடந்த பல போட்டிகளில் தோல்விகளை சந்தித்து வந்த பாகிஸ்தான் அணிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
இதேவேளை நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பாகிஸ்தான் சஜித் கான், நோமன் அலி ஆகியோர் இங்கிலாந்து அணியின் இரண்டு இன்னிங்ஸிலும் 20 20 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
இதில் சஜித் கான், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் 7 விக்கெட்டுக்களையும் நோமன் அலி 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்
இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தின்போது, நோமன் அலி 8 விக்கெட்டுக்களையும், சஜித் கான் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.