நடைபெற்று முடிந்த தேசிய மட்ட கைப்பந்துப் போட்டியில் கிளிநொச்சி பரந்தன் இந்து மகா வித்தியாலயம் 2ம் இடத்தினை பெற்றுள்ளது.
அம்பாந்தோட்டை ராஜபக்ச மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்றைய தினம் குறித்த இறுதிப் போட்டி இடம்பெற்றது.
20 வயதுப் பிரிவிற்கான பெண்கள் அணியில் கலவல சென் அன்றனிஸ் கொலிஜ் உடன் விளையாடிய பரந்தன் இந்து மகாவித்தியாலயம் 2ம் இடத்தினை தனதாக்கியது.
பின்தங்கிய பகுதியில் பெளதீக வளக்குறைவுகளுடன் இயங்கும் குறித்த பாடசாலை மாணவர்களின் வெற்றியை பாடசாலை சமூகம் மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றது.
குறித்த வீரர்களை வரவேற்று மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் பரந்தன் சந்தியில் ஆரம்பமானது.
பட்டாசுகள் கொழுத்தி மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டு வீராங்கனைளிற்கு வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து பாடசாலை வரை பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வீராங்கனைகள் அழைத்து செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் காட்சிகளும் எமக்கு கிடைத்துள்ளது. எவ்வித பெளதீக வளங்களும் இல்லாமையை இக்காட்சிகள் பறைசாற்றுகின்றது.
இந்த நிலையில் தமது முயற்சியினால் வெற்றிகண்ட இம்மாணவிகளை நாமும் பாராட்டுகின்றோம்