முதலில் பங்களாதேசில் திட்டமிடப்பட்டு பின்னர் ஐக்கிய அரபு இராச்சித்துக்கு மாற்றப்பட்ட மகளிருக்கான 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.
சார்ஜா கிரிக்கெட் மைதானம் மற்றும் துபாய் சர்வதேச மைதானம் ஆகிய இரண்டு முக்கிய இடங்களில் இந்தப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஆரம்ப நாளான ஒக்டோபர் 3ஆம் திகதி, சார்ஜாவில் பங்களாதேஸ் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.
இதனை தொடர்ந்து, அதே நாளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் இரண்டாவது போட்டி நடத்தப்படவுள்ளது.
மேலும், 2024 மகளிர் - 20க்கு 20 உலகக் கிண்ணப்போட்டிகளில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, குழு A இல் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. B குழுவில் பங்களாதேஸ், இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதறகைமைய, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஒக்டோபர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அரையிறுதிக்கு தகுதிப்பெறவுள்ளன. இறுதிப்போட்டி அக்டோபர் 20ஆம் திகதி துபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.