எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்க்கான ஐ.பி.எல். தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டன.
அத்துடன் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு முன் மெகா ஏலம் நவம்பர் மாதத்தில் நடைபெறஉள்ள நிலையில் ஏலத்திற்கு முன் பல்வேறு அணிகளும் தங்களது அணிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பை ஆகிய அணிகள் அடுத்த சீசனுக்கு முன் தங்களது அணிகளைச் சேர்ந்த தலைமை பயிற்சியாளர்களை நியமித்து உள்ளனர்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது பந்து வீச்சு பயிற்சியாளரை அறிவித்துள்ளது. அதன்படி மும்பை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பராஸ் மாம்ப்ரே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நவம்பர் 2021 முதல் ஜூன் மாதம் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் வரை இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டவர். மாம்ப்ரே, தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளர் லசித் மலிங்காவுடன் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்த்தனேவின் கீழ் பயிற்சியாளர் குழுவின் ஒரு பகுதியாக பணியாற்றுவார் எநாவும் அந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.