2026 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுக்களில் முக்கிய விளையாட்டுகள் நீக்கம்!

tubetamil
0

 2026 ஆம் ஆண்டு  பொதுநலவாய விளையாட்டுகளில் இருந்து கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



அத்துடன் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஓகஸ்ட் 2 வரை நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 10 விளையாட்டு பிரிவுகள் மட்டுமே இடம்பெறவுள்ளன 


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 2022 பொதுநலவாய விளையாட்டுகளில் மகளிர் டி20 கிரிக்கெட் இடம்பெற்றதுடன், இதற்கு முன் 1998ல் ஆடவர் கிரிக்கெட் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. 2026ல் கிரிக்கெட் மட்டுமல்லாமல் ஹொக்கி, ரக்பி, பேட்மிண்டன், ஷூட்டிங், மல்யுத்தம் போன்ற பல விளையாட்டுகளும் நீக்கப்பட்டுள்ளன.



குறைந்த செலவில், சுற்றுச்சூழல் பாதிப்பை குறைத்து, சமூக நன்மைகளை அதிகரிக்கும் வகையில் 2026ல் பொதுநலவாய விளையாட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுநலவாய விளையாட்டு கூட்டமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி கேட்டி சாட்லேர் தெரிவித்துள்ளார். 



2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் விளையாட்டானது 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடவர், மகளிர் டி20 வடிவில் இடம்பிடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top