கமல் ஹாசனின் கனவு திரைப்படம் மருதநாயகத்தை மீண்டும் 27 வருடங்களின் பின்னர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samuel Charles Hill எழுதிய யூசப் கான் புத்தகத்தை 80சதவீதம் தழுவி, கமல் ஹாசன் மற்றும் பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய கதை தான் இந்த மருத நாயகம்.
இந்தப்படத்தின் தொடக்க விழாவிற்கு இங்கிலாந்து ராணி எலிசபத் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலின் கனவு படமாக மருதநாயகம் இருந்தாலும், அதனை இதுவரை நம்மால் திரையில் காணமுடியவில்லை.
விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் பேட்டி ஒன்றில் கூட, மருதநாயகம் படம் மீண்டும் எடுப்பேன், எனக்கு பதிலாக வேறு யாரவது ஹீரோவாக நடிப்பார் என கமல் கூறியிருந்தார்.
இவாறான நிலையில் 27 ஆண்டுகளுக்கு பின் கைவிடப்பட்ட மருதநாயகம் திரைப்படம் மீண்டும் எடுக்க கமல் முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு அந்த கதாபாத்திரத்தை உருவாக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.