பங்களாதேஷில் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு பிடியாணை உத்தரவு !

tubetamil
0

 பங்களாதேஷின்  முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.



ஷேக் ஹசீனாவை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் பங்களாதேஷ் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இட ஒதுக்கீடு தொடர்பாக, வங்கதேச மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.



இதனை தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ், 84, தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.

இந்நிலையில், 15 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தனது ஆட்சிக்காலத்தில், எதிர்க்கட்சி கட்சியை சேர்ந்தவர்கள் மீது மனித உரிமை மீறல்கள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் ஜூலையிலிருந்து ஆகஸ்ட் மாதத்திற்குள் அதிகப்படியான குற்றங்கள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.


சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் முகம்மத் தாஜூல் இஸ்லாம் கூறியதாவது:



ஹசீனா, நாட்டை விட்டு சென்றதிலிருந்து இங்குள்ள மக்களை சந்திக்கவில்லை. அவர்,இந்திய தலைநகர் டில்லி அருகே, ராணுவ பகுதியில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

இதனால் இந்திய, வங்கதேச அரசுகள் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.தற்போது வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் ஹசீனா மீதான வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அதனை கேட்டறிந்த வாங்க தேச நீதிமன்றம் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில் பங்களாதேஷ் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top