இரத்தினபுரி - கொழும்பு வீதியில் உள்ள மாதம்பே பகுதியில் 50 பேரை ஏற்றி சென்ற தனியார் பேருந்து ஒன்றில் திடீரென தீப்பற்றியுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 07.30 மணியளவில் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும் குறித்த விபத்தின் போது அந்த பேருந்தில் பயணித்த எவருக்கும் ம் காயமோ அல்லது பாரிய காயமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் பேருந்து முற்றாக எரிந்து நாசமானது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரக்வான பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.