மீள ஒப்படைக்கப்பட்ட 50 துப்பாக்கிகள்

tubetamil
0

பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை தற்காலிகமாக ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இதுவரை 50க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க ஆயுதக் கட்டளைச் சட்டத்தின் பிரிவுகள் 6(1) மற்றும் 6(2) இன் கீழ் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டது.


 மீளாய்வு நடவடிக்கையின் பின்னர் இந்த துப்பாக்கிகள் மீண்டும் கையளிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.


 அத்துடன் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் வெலிசரவில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் (CEFAP) தங்கள் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அனைத்து உரிமதாரர்களுக்கும் அறிவித்தது.


 மேலும் தற்போதைய நிலவரப்படி, கிட்டத்தட்ட 50 துப்பாக்கிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு காரணங்களுக்காக பாதுகாப்பு அமைச்சகத்தால் சுமார் 1,650 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ள தெரிவிக்கப்படுகிறது.தாகவும் 


 அத்துடன் 1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், அனைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் திருப்பித் தரப்பட வேண்டும் என்றும், இணங்கத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.


 குறித்த இதேவேளை சொத்து/பயிர் பாதுகாப்பு அல்லது விளையாட்டு நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் துப்பாக்கி உரிமையாளர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top