அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் மில்டன் புயல் புதன்கிழமை 5-ம் நிலையில் இருந்து 3-ம் நிலை புயலாக வலுவிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
எனினும் அது புளோரிடாவை நெருங்கிய போது மணிக்கு 195 கி.மீ வேகத்தில் காற்று வீசியது என்று அமெரிக்க புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, இந்த சூறாவளியினால் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், இருளில் மூழ்கின. 2 மில்லியனுக்கும் மேற்பட்ட வீடு, வர்த்தகங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் 55 இலட்சத்துக்கும் அதிகமான மக்க வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஹார்டி பகுதி, அதன் பக்கத்தில் உள்ள சரசோட்டா, மனாட்டி ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்டன. கனமழை கொட்டி தீர்த்ததால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட்டுள்ளதாகவும், பல ஏரிகள் நிரம்பி வழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.