ரணிலின் ஆட்சி கால மதுபானசாலைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை

tubetamil
0

 ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்தில் வடக்கு மாகாணத்தில் மதுபானசாலைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை மீளாய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சமூகத்தின், குறிப்பாக இளைஞர்களின் நல்வாழ்வை பாதுகாக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, பரந்தன் சந்தியில் இருந்து இரணைமடு சந்தி வரையான பாதையில் அண்மைய வருடங்களில் பல மதுபானசாலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அமைக்கப்பட்டுள்ளதாக கீதாநாத் குறிப்பிட்டுள்ளார்


கடந்த ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்தில், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெறுவதற்காக இந்த மதுபான அனுமதிப்பத்திரங்கள் பல வழங்கப்பட்டன என்பதை, ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்

மேலும், அண்மைக்காலமாக இதுபோன்ற நிறுவனங்கள் தோன்றியதால், அன்றாடம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மையான மக்கள் தினசரி கூலி வேலை செய்பவர்கள் என்ற அடிப்படையில், மதுபானகங்களின் பெருக்கம் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கீதாநாத் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், இந்த மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்துமாறும் அவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top