76 வயதாகும் எதிர்கட்சியின் மூத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella), தனது 36 ஆண்டுகால நாடாளுமன்ற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்
அந்த வகையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அலி சப்ரி, பந்துல குணவர்த்தன, காமினி லொக்குகே போன்றோரும் நாடாளுமன்ற வாழ்க்கைக்கு ஓய்வை அறிவித்துள்ளனர்
இந்தநிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிரியெல்ல, பல தசாப்தகால அரசியல் சேவையின் பின்னர் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவரது மகள் கண்டி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கீழ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை உறுதிப்படுத்துமாறு செய்தியாளர்கள், லக்ஷ்மன் கிரியெல்லயிடம் கேட்ட போது, இந்த விடயம் இன்று வெளிப்படுத்தப்படும் என்று பதிலளித்துள்ளார்.