அடுத்த சில மாதங்களில் எண்ணெய் விலையை 15 - 20% வரை குறைக்கும் சாத்தியம் இருப்பதாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekara) தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் திருத்தம் தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) பொய்யொன்றை கூறியதாக கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 30 ஆம் திகதி ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 311 ரூபாவாகும்.
95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த எரிபொருள் விலை திருத்தமானது விலைச் சூத்திரத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பெட்ரொலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுடனான மீளாய்வு கலந்துரையாடலின் பின்னர் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.