இதுவரை உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு நினைவூட்டல் ஒன்றை வழங்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளதுடன் தில் வரவில்லை என்றால் சட்டத்தை அமல்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரிக்கு மாற்றுவதற்கும் அறிவுறுத்தலும் வழங்கியுள்ளார்.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.