கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆபத்தான மரங்கள் காணப்பட்டால் அவ தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பத்ராணி ஜயவர்த்தன நேற்றைய தினம் (11) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு மரம் ஆபத்தானதா இல்லையா என 100 சதவீதம் உறுதிபடுத்துவதற்கு எந்த உபகரணங்களும் இல்லை. கொழும்பு நகரத்தில் உள்ள மரங்கள் ஆபத்தானதாக மாறுவதற்கு பல காரணங்கள் உள்ளன.இதனால் மரங்களைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். என தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உங்களது பிரதேசங்களில் காணப்படும் ஆபத்தான மரங்கள் தொடர்பில் அறிவிப்பதற்குக் கொழும்பு மாநகர சபையின் 110 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுங்கள். இத்தகைய, ஆபத்தான மரங்களினால் உயிர்ச்சேதங்களும் ஏற்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.