முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா கமல், தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்தவர் தான் நடிகை ஸ்னேகா
படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருந்த நிலையில் 2009ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகி இருந்த சினேகா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான GOAT படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ,ஈண்டும் பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில், பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்ற சினேகாவிடம் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, சற்றும் தயங்காமல் தல அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். என் அக்காவுக்கு தளபதி விஜய் மிகவும் பிடிக்கும் அவர் அறையில் விஜய் புகைப்படங்கள் அதிகம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.