அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து மூன்று கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டை ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சோதனையின் போது, இந்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கண்டுபிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் சிறிய அளவிலானவை எனவும் சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த மூன்று கைத்தொலைபேசிகளும் யாருடையதென தெரியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.