சுமந்திரன் வாக்கு கேட்க சென்றால் மக்களிடம் இருந்து காப்பாற்ற விசேட அதிரடிப்படைகளும் அவரை புடை சூழ செல்ல வேண்டும் என தமிழரசு கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் (20) வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நடைபெற்ற ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
எங்களுடைய தேசியத்தை முழுமையாக தென் இலங்கையின் தேசியத்துடன் கரைக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றவர்தான் சுமந்திரன் எனவே தான் சுமந்திரன் வாக்கு ங்கேட்க செல்லமாட்டார். மாறாக அவ்வாறு வாக்கு கேட்க சென்றால் மக்களிடம் இருந்து காப்பாற்ற விசேட அதிரடிப்படைகளும் அவரை புடை சூழ செல்ல வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்திற்கு முக்கிய விடயங்கள் என்றால் ஏதாவது ஒரு வருத்தம் வந்துவிடும். ஏனென்றால் அவருக்கு கையொப்பமிட விருப்பம் இருக்காது எனவும் தெரிவித்த அவர் மாவை சேனாதிராஜா கட்சியின் முதுகெலும்பு என வர்ணிக்கப்பட்டவர். கட்சியை ஒற்றுமையுடன் கொண்டு செல்வதற்கு மிகவும் பாடுபட்டவர்.
இந்நிலையில் அந்த கட்சியை விட்டு விலகுவதை விட எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை.
வேட்பாளர் தெரிவுப்பட்டியலில் 17 பேர் இருந்தார்கள். ஆனால் தனக்கு சாதகம் இல்லாதவர்களை, முதுகெலும்பில்லாத சக்தியலிங்கமும் சுமந்திரனும் இணைந்து நீக்கிவிட்டு, சுமந்திரன் தன்னுடன் சேர்த்து 9 பேரை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.